எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் இன்று(27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும் போது, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தேர்தலுக்கும் தமது அணி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.