தம்புள்ள அயோரா மற்றும் பி லவ் கண்டி அணிகளுகிடையிலான T20 போட்டியில் தனஞ்ஜெய டி சில்வாவின் அதிரடி பந்துவீச்சு காரணமாக தம்புள்ள அயோரா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
LPL2023 19வது போட்டி இன்று இடம்பெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி அணி தம்புள்ள அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதன்படி 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றத.
இதில் அவிஸ்க பெர்ணான்டோ 41 ஓட்டங்கள், சதிர சமரவிக்ரம 31 ஓட்டங்கள் . பந்து வீச்சில் கண்டி அணி சார்பாக நுவான் பிரதீப் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள்.
வெற்றி இலக்கான 163 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடுக்களம் நுழைந்த கண்டி அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
தினேஷ் சந்திமல் சிறப்பாக ஆடி 50 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்யூஸ் 26 ஓட்டங்கள் , தம்புள்ள அணி சார்பாக பந்து வீசிய தனஞ்ஜெய ஆரம்ப வீரர்கள் இருவரையும் தமது துல்லியமான சுழல் பந்தின் ஊடாக ஆட்டமிழக்க செய்தார். அவர் 2 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
புள்ளி பட்டியலில் தம்புள்ள அணி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.