நூருல் ஹுதா உமர்
“அம்பாறை மாவட்ட நூலகர்களின் வினைத்திறனை மேம்படுத்துமுகமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை”
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை கடந்த 19.08.2023 ஆம் திகதி சனிக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தின் கேட்போர் கூடத்தில் “Empowering Libraries with the power of Research” எனும் தலைப்பில் Y.M. Trust அனுசரனையுடன் இடம்பெற்றது.
இந் நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகவும,; சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் கலாநிதி ற.த.ஜேயராஜ், வளவாளர்களாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பாரதிதாசன், பல்கலைக்கழக நூலக விஞ்ஞான பிரிவின் பொறுப்பாளர் கலாநிதி ஆர். பாலசுப்ரமணி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் ஆர். மஹேஸ்வரன் ஆகியேரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வினை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.சி.எம். அஸ்வர் தொகுத்து வழங்னார், மற்றும் ஏனைய சிரேஷ்ட உதவி நூலகர்களான கலாநிதி எம்.எம்.மஷ்ரூபா, ஏ.எம்.நஹ்பீஸ், எஸ்.எல்.எம்.சஜீர், உதவி வலையமைப்பு முகாமையாளர்; எம்.ஜே.எ.சாஜித்,; நூலக உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வலைய பணிமனைகளின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பொது நூலகர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை நூலகர்கள், கல்வியற் கல்லூரி நூலகர்கள், தொழிநுட்ப கல்லூரி நூலகர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக வரவேற்புரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுதீன் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து Y.M. Trust யின் நன்கொடைப் புத்தகப் பொதியினை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் SERLIN அமைபிப்பின் நூலகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய பல்கலைக்கழக உபவேந்தர் சமகாலத்தில் நூலகங்களுக்கிடையேயான தகவல் வலையமைப்பு என்ற விடயம் மிகவும் அவசியமானது என்றும் இதன் மூலம் நூலகங்கள் எல்லாம் டிஜிடல் மயமாக்கலை நோக்கிப்; பயணித்துக் கொண்டிருகப்பதனால் நாம் அனைவரும் அதனைப்பின் தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் வளவாளரான தென்னிந்தியாவைச் சேர்ந்த கலாநிதி ஆர். பாலசுப்ரமணி Empowering Libraries through Research” எனும் தலைப்பில் explain paper, elicit, DOAJ, teacher tube and library thing இன்னும் பல தலைப்புகளைக் கொண்டு online மூலம் செயற்படுத்தி மிகவும் தெளிவான விழக்கங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து வளவாளரான பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் ஆர். மஹேஸ்வரன் அவர்கள் “Needs for Empowering our Libraries”எனும் தலைப்பில் நூலக உத்தியோகஸ்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமுகமாக கிழக்கு பிராந்தியத்தில் இருக்கின்ற அனைத்து நூலகர்களும் ஒரு union கீழ் செயற்படவேண்டும் அப்போதுதான் உங்களின் கல்வித்தகைமைகளுக்கு அமைவாக உங்களின் பதவி உயர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை விளங்கப்படுத்தினார்
இதன்படி நூலக மற்றும் தகவல் வலையமைப்புத் திட்டத்தின் இணைப்பாளர் கலாநிதி எம்.எம்.மஷ்ரூபா இணைய வலையமைப்பினூடாக தென்கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து வகையான நூலகர்களையும் ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்டார். இதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள நூலகர்களை வலுவூட்டுவதுடன் சிறந்த சேவையினை வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்குறிப்பிட்டார். SERLIN பணிப்பாளர் நூலகர் எம். எம். றிபாயுத்தீன் தனது கருத்தை தெரிவிற்கும்போது. உத்தேச நூலகத் தகவல் வலையமைப்பினூடாக இப்பிரதேச நூலகங்களின் சேவை வழங்கள் திரனை மேம்படுத்த வேண்டும். தற்காலத்தில் இவ் அமைப்பு மிகவும் முக்கியமானது என்றும் தற்காலத்தில் பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றபடியால் நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனும் நோக்கில் இப்பணியை முன்னோக்கிச்செல்ல வேண்டும் என்று SERLIN இன் முக்கித்துவத்தையும் விபரித்தார். நூலகங்களின் நூற்சேற்கைகளை வலப்படு;த்துதல், உறுப்பினர்களிடையே வழங்களைப்பகிர்தல், நூலக அமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குதல், நூலகங்களின் திறனை மேம்படுத்துவதற்கான தொழில்சார்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பணியாளர்கள் மற்றும் தொழில்சார் ஊழியர்களை ஊக்கப்படுத்துதல், வாசிப்பை ஊக்குவித்தல் என்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்டுதான் இவ் SERLIN அமைப்பினை உருவாக்கினோம் என்று தெரிவித்தார்.
நிகழ்வின் முடிவில் SERLIN அமைப்பினருக்கு சான்றிதழ்கள் வழங்கி குறித்த நூலக மற்றும் தகவல் வலயமைப்புச் செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் வலயமைப்பின் குறிக்கோள், எதிர்பார்க்கப்படும் அடைவுகள், இலக்குக் குழுக்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் குறித்த திட்டத்தின் நிலைபேறான தன்மை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.