டி சந்ரு

நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தில் எடை குறைந்து பிறந்த 22 குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் தூதுவர் போசாக்கு உணவு பொதிகள் வழங்கி வைத்தார்.

பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தில் போசாக்கு குறைவினால் எடை குறைந்து பிறக்கின்ற குழந்தைகளுக்கு போசாக்கு உணவு பொதிகளை டெஸ்போர்ட் தோட்ட சுகாதார பிரிவினரால் மாதாந்தம் தொடர்ந்து வழங்கி வைழங்கி வந்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று (7) திங்கட்கிழமை பிரான்ஸ் தூதுவர் ஜீன் பன் கோஸ் பெடா அவர்கள் நேரடியாக சென்று 22 குழந்தைகளின் குடும்பங்களுக்கு போசாக்கு உணவு பொதிகளை வழங்கி வைத்தார்.

நானுஓயா டெஸ்போர்ட் தோட்ட சுகாதார பிரின் ஏற்பாட்டில் தோட்ட வைத்தியசாலையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகர ரட்னாயக்க உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *