நியூயார்க் நகரில் பெரிய பரிசை இலவசமாக வழங்கப்போவதாக இணையத்தில் வெளியான தகவலால் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

இந்நிலையில் குவிந்த கூட்டத்தைக் கலைக்க நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் களமிடக்கப்பட்டனர்.

இணைய தளங்களில் காணொளிகளும் நேரடி ஒளிபரப்புகளும் செய்யும் காய் செனட் நியூயார்க் நகரில் பெரிய பரிசு ஒன்றை வழங்கப்போவதாகத் தமது Instagram பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அவர் இலவசமாக PlayStation 5 கருவிகளை வழங்கவிருந்ததாகக் கூறப்படும் நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதியது. கடையின் கூரை, காரின் மேல் என எங்கும் மக்கள் கூட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *