( நூரளை பி. எஸ். மணியம்)
நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின்” ஏற்பாட்டில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ ஆலய பிரதான மண்டபத்தில் இன்று (23) புதன்கிழமை நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட கண் பார்வை குறைந்த வரிய குடுபத்தை சேர்ந்த மக்களுக்க மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இவ் வைபவத்தின் போது” நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின்” தலைவி திருமதி ஸ்ரீ சிவராஜன் கருத்து தெரிவிக்கையில்’ நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் நலிவுற்ற சமூகத்தின் மேம்பாட்டிற்காக சேவை செய்யஆரம்பிக்கப்பட்ட இந்தஅமைப்பின் முதலாவது வேலைத்திட்டமாக நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் வாழும் வரிய குடும்பங்களைச் சேர்ந்த கண் பார்வை குறைந்த 60 பேரின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு மூக்கு கண்ணாடிகள் வைழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முதலாவது நிகழ்வு இன்று நடைபெறுகிறது.மேலும் எதிர்வரும் காலங்களிலும் சிறுவர்கள், முதியவர்கள், இளம் தாய்மார்களின் பாதுகாப்பு ,சுயத்தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை முதன்மைபடுத்தி செயல்பட்டு வருகின்றோம்.என கூறினார்.
இவ்வைபவத்தில் இவ்வமைப்பின் ஆரம்ப கர்தாவான திருமதி கணபதி சிவராஜா, பொதுச்செயலாளர் திருமதி தியாகராஜன் உட்பட இவ்வமைப்பின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.