ராமு தனராஜா
பதுளை பசறை பிரதான வீதியில் இரு வேறு விபத்துகளில் ஐவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை பெய்த கடும் மழையின் போது பதுளை பசறை பிரதான வீதியில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்களில் ஐவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பசறை வீதி 5 ம் கட்டை பகுதியில் பேருந்து ஒன்றும் மகிழூந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மகிழூந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் மகிழூந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் மகிழூந்தின் சாரதியும் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா