வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்பு துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார்.

அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.

கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்டது.

இந்தநிலையில் பயங்கரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா. இறங்கியது. தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

தோல்வியில் முடிந்தநிலையில் சுபியுல் அனமை மீட்க வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முயற்சிகள் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *