நூருல் ஹுதா உமர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பாலர் பாடசாலை மட்டங்களில் சுகாதார மேம்பாட்டினை விஸ்தரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது..
பணிமனையின் சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம் பைரூஸ் அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச் ரிஸ்பின், பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஏ எம் ஹில்மி, பிராந்திய வாய்ச் சுகாதார நிபுணர் டாக்டர் எம் எச் கே. சரூக், மாவட்ட சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம் பைரூஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
பாலர் பாடசாலைகளில் போசனை மட்டத்தினை அதிகரிப்பது வாய் சுகாதாரத்தினை மேம்படுத்தி சிறுவர்களின் வாய் சுகாதாரத்தை பாதுகாப்பது சிறார்களின் பொது சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த நிகழ்வின்போது கலந்துரையாடப்பட்டன
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பாலர் பாடசாலை பணியகத்தின் உத்தியோகத்தர்கள் ECDO மேற்பார்வை பொது சுகாதார மாதுக்கள் பாடசாலை பற்சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது