ஓய்வூதிய மறிசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தது 108 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 291 பேர் அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர.
பிரான்ஸ் ஜனாதிபதியின் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே தினத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பிரான்ஸ் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கினர், பரிஸில் 119,000 பேர் இருந்தனர் என்று உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.