பிரேசில் கடந்த திங்கட்கிழமை இரவு தாக்கிய பெரும் புயலால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன.

குறித்த புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அந்த வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கூடவே பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *