தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நெடுந்தூர பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசனங்களை முற்பதிவு செய்யக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.