நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) 2 மணிக்கு பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.