இந்தியாவில் மதுரை மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை SpiceJet மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி, 30 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் SG-003 என்ற தனது முதலாவது விமானம் நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் இந்தியா – கட்டுநாயக்கா மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும்.