(வாஸ் கூஞ்ஞ) 08.மன்னாரில் மணி மாஸ்ரர் விருதுக்கான திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழாவில் 41 மாணவர்களுக்கு பத்து லட்சம் பணமும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இ

ந்த நிதியானது மணி மாஸ்ரரின் ஓய்வுதிய பணத்தில் 05 இலட்சமும் மிகுதி பணம் இக்குடும்பத்தின் நான்கு பிள்ளைகள் இணைந்து பங்களிப்பு செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிளிப்பு நிகழ்வானது வெள்ளிக்கிழமை (07) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் பிரதம விருந்தினர்களாக மடு . மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் திருமதி அ.கி.வொலன்ரைன் மற்றும் செல்வி ஜூ.டீ.தேவராஜா ஆகியோரும்கௌரவ விருந்தினர்களாக மடு மற்றும் மன்னார் உதவிக் கல்வி பணிப்பாளர்கள் திரு சோ. கலாவண்ணன் , திரு.க.மனோரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் மாணவர்கள் மற்றும் இளம் சமூகம் தங்கள் ஓய்வு நேரங்களில் தீய வழிகளில் செல்லாதிருக்கும் முகமாக  வி.எம்.சி.ரி. என்னும் ஒரு அமைப்பின் இயக்குனரான எந்திரி சூசைப்பிள்ளை விமலராஜன் அவர்களால் உருவாக்கப்பட்டு இவர்களுக்கு இலவசமாக நீண்ட காலமாக கலைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு அங்கமாக மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் மற்றும் தமிழையும் வளர்க்க வேண்டும் என்று நோக்கில் திருக்குறள் போட்டிகள் மன்னார் மாவட்டத்திலுள்ள இரு கல்வி வலயங்களிலுமுள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களிலுள்ள மாணவர்கள் மத்தியில் இப்போட்டிகள் இடம்பெற்றன.

இப்போட்டிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்றன.

இதில் முதலாம் பிரிவு முதலாம் ஆண்டு மாணவார்களில் வெற்றியாளர்கள் மூவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாவும் இதில் பங்குபற்றிய ஏழு பேருக்கு தலா 7500 ரூபாவும் வங்கியில் வைப்பு செய்யப்பட்ட வங்கி புத்தங்கள் வழங்கப்பட்டதுடன் சுமார் 5000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மணி மாஸ்ரர் விருதுக்கான திருக்குறள் போட்டியில் ஏனைய மூன்று பிரிவுகளிலும் வெற்றியீட்டிய முதல் மூன்று பேருக்கு தலா 50,000 , 30,000 . 20.000 ரூபா வீதம் பணத் தொகையும் இத்துடன் இவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் இந்த மூன்று பிரிவுகளிலுமுள்ள தலா 07 பேர் கொண்ட 21 மாணவர்களுக்கு தலா 7500 ரூபா வங்கியில் வைப்பு செய்யப்பட்ட புத்தகங்களும் மற்றும் 7500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.


(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *