( நூரளை பி. எஸ். மணியம்)
இந்தியவம்சாவளி மக்கள் மலையகத்தில் குடியேரி 200 வருடங்கள் கடந்திருக்கும் இவ் வேளையில் “மலையகம் 200” ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் முகமாக “தேயிலை கொழுந்தின் தொலை நோக்கு பார்வை” என்ற தலைப்பின் கீழ் தேயிலை தோட்ட வரலாறு மற்றும் தொழிற்சங்க வளர்ச்சி தொடர்பான ஆய்வு கட்டுரை ஒன்றை கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக இயக்குனரும் சட்டத்தரணியுமான ஏ. பி. கணபதிபிள்ளை புத்தகமாக நுவரெலியாவில் வெளியிட்டு வைத்தார்.
நுவரெலியா கொல்ப் கழக மண்டபத்தில் நேற்று 26 சனிக்கிழமை நூல் வெளியீடு இடம்பெற்றது. இதன் போது இங்கு உரையாற்றியவர்கள் புத்தகத்தை எழுதி அச்சிட்டு வெளியிட்ட சட்டத்தரணி ஏ. பி கணபதி பிள்ளையின் செயலை பாராட்டி பேசியதோடு அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இவ் வைபவத்திற்கு வருகை தந்த அதிதிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்றலுடன் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
சிறப்பு பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்த தோட்ட நிர்வாகி ஹேர்மன். எம். குணரட்ன,அதனை தொடர்ந்து தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு முன்னாள் செயலாளர் எம். வாமதேவன், அவரை தொடர்ந்து கண்டி சர்வதேச பாடசாலை அதிபர் ஹசிரா சவாஹிர், அவரை தொடர்ந்து அரசியல் வாதியான மாத்தரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க வீரசுமன, இவரை தொடர்ந்து இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஜி. வீரசிங்க சிறப்புரையாற்றினார்.
இவ் வைபவத்தின் நன்றியுரையை “தேயிலை கொழுந்தின் தொலை நோக்கு பார்வை” என்ற தலைப்பிலான நூலின் ஆசிரியர் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக இயக்குனரும் சட்டத்தரணியுமான ஏ. பி. கணபதிபிள்ளை வழங்கினார்.
இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்கவும் விசேட பிரதி நிதிகளாக முன்னாள் அமைச்சர் தியூ குணசேக்கர, கியூபா நாட்டு இங்கை பிரதிநிதி எம். கொன்சலாஸ் கரீடோ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ் வைபவத்தில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுப்பையா சதாசிவம், சட்டத்தரணி பி. இராஜதுரை உட்பட சட்டத்தரணிகள் கல்வி மான்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.