ரஷ்யாவில் உள்நாட்டு போர் தலைதூக்கியுள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து விமானம் மூலம் தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக பயன்படுத்தும் விமானங்களில் ஒன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு மொஸ்கோவில் இருந்து புறப்பட்டதாக ஃப்ளைட் ரேடார் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் அரை மணி நேரத்திற்குள், புட்டினின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.