ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த நகரில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல ஆளில்லா விமான தாக்குதல்கள் வான் பாதுகாப்பு சாதனங்களால் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யாவின் தலைநகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.