ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அனைவரும் ‘துரோகிகள்’ என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், எஸ்டோனியா தனது எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், அண்டை நாடான ரஷ்யாவின் எந்தப் பகுதிக்கும் மக்கள் பயணிக்க வேண்டாம் எனவும் எஸ்டோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு துரோகத்தை எதிர்கொள்கிறது என்றும் இதற்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்திற்கு உரிய அனைத்து உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாக்னர் கிளர்ச்சியானது இராணுவத்தின் முதுகில் குத்தும் செயற்பாடு என்றும் கண்டித்துள்ளார்.
மேலும் வாக்னர் தலைவர் கைப்பற்றியதாக கூறப்படும் தெற்கு நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் நிலைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.