கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது.
ருவாண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் பலியாகியுள்ளனர்.
மலை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளன.
இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ருவாண்டா அரசு தெரிவித்துள்ளது.
ருவாண்டாவில் மழையினால் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
இதற்கிடையில், வரும் நாட்களில் ருவாண்டாவில் கனமழை பெய்ய இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈர நிலங்கள் மற்றும் பிற ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ருவாண்டாவில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை பேரிடர் பாதிப்பாக இது கருதப்படுகிறது.
அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.