லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அவ்வனர்த்தத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த தோட்டத்தில் உள்ள மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார். அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் குறித்த இளைஞனும் ஓயாவில் இறங்கியுள்ளார். அவ்வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து தேடி மீட்டனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.