“என்ன நடந்தாலும் என் கடமை மாறாது” – உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ராகுல் காந்தி டூவிட்டரில் பதிவு செய்துள்ளார்
Come what may, my duty remains the same.
Protect the idea of India.
— Rahul Gandhi (@RahulGandhi) August 4, 2023
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோதி’ என்ற பெயர் குறித்து குறிப்பிட்ட கருத்துகள் சர்ச்சையை எழுப்பின. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பு எதிரொலியாக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் இன்றைய தனது உத்தரவில், “அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் கீழமை நீதிமன்றம் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளது.
<span;>அதேவேளை “மோடி” பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை, புத்தரின் மேற்கோளைக் கூறி பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.
<span;><span;>கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.4) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம், தகுதியிழப்புக்கு ஆளான ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக முடியும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.