– எம் .நாசர்-
வெல்லம்பிட்டி – கித்தம்பஹுவ பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் மோதரை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தாழ்த்துவ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.