இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல் தென்கொரியாவில் நடைபெற்றது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அலி சப்ரி ஆகியோர் தென் கொரியாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 56வது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.