ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும்நிலையில், ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டடு தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில், 3 இற்கும் அதிகமான குரூப் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகள் மற்றும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டிக்கு இந்த மைதானம் பயன்படுத்தப்படுமா? என ஆய்வுக்குப் பிறகு தான் தெரிய வரும் எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *