( வாஸ் கூஞ்ஞ) 

 

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் வேளாண்மைக்கு நீர் பாச்சிவிட்டு வீடு திரும்பிய இரு விவசாயிகளின் மீது துவக்குச் சூடு. நடத்தப்பட்டதில் இருவரும் ஷ்;தலத்திலேயே மரணித்துள்ளனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை (24) காலை ஒன்பது மணிக்குப் பிற்பாடே அடம்பன் முள்ளிக்கண்டல் குளக்கட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் குளக்கட்டில் ஒரு மோட்டர் சைக்கிள் விழுந்து கிடப்பதையும் மோட்டர் சைக்கிளுக்கு அருகில் இருவர் கிடப்பதையும் இக்குளக்கட்டுக்கு அருகாமையிலுள்ள பிரதான வீதியால் பயணித்த ஒருவர் கண்டு அடம்பன் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து இவ்விடத்துக்குச்  பொலிசார் சென்று கவனித்தபோதே இருவரும் சூட்டுக்காயங்களுடன் மரணித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்த இருவரில் ஒருவர் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த  யேசுதாசன் அருந்தவராஜா (வயது 45)  என அடையாளம் காணப்பட்டதுடன் இறந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நொச்சிக்குளத்தில் இடம்பெற்றிருந்த இரட்டைக் கொலை வழக்கில் ஒரு சந்தேக நபராக விளக்க மறியலில் இருந்துவிட்டு தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த மற்றையவர் மன்னார் ஈச்சளம்வக்கையைச் சார்ந்த கணபதி காளிமத்து (வயது 56) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சம்பவம் நடந்த வியாழக்கிழமை (24) அன்று காலை அடம்பன் முள்ளிக்கண்டல் என்னும் பகுதியிலுள்ள தங்கள் சிறுபோக வேளாண்மைக்கு நீர் பாய்ச்சிவிட்டு குளக்கட்டு ஊடாக அடம்பன் பாப்பாமோட்டை பிரதான பாதைக்கு ஒரு மோட்டர் சைக்கிலில் வந்து கொண்டிருந்தபோதே இனம் தெரியாதவர்களால் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அடம்பன் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளதுடன் இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என இறந்தவர்களின் உறவினர்கள் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *