நூருல் ஹுதா உமர்
ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அன்னமலை வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ. எல்.எம் றிபாஸ், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். சி. எம். மாஹிர் ஆகியோர் விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டனர்.



மேலும் இவ்விஜயத்தின் போது கட்டுமான பணிகளின் துரித தன்மை மற்றும் ஏனைய சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது திருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது

