ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க மிகவும் ஆவலாக உள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தெற்காசியப் பிராந்தியத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர் எமோட்டோ சச்சிகோ தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான JICA இன் அர்ப்பணிப்பை எமோட்டோ சச்சிகோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.