அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை தாக்கிய சூறாவளி காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சூறாவளி நிலை காரணமாக சுமார் 400 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம், மிசிசிப்பி மாநிலத்தைத் தாக்கிய இதேபோன்ற சூறாவளியில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பல வீடுகள் மற்றும் சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்தன.
அமெரிக்க வானிலை அதிகாரிகள் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற அதிக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அடுத்த சில மணித்தியாலங்களில் கடும் மழை, சூறாவளி மற்றும் கடுமையான நிலைமைகளை எதிர்பார்க்கலாம் என நாட்டின் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.