அமெரிக்காவில் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு இந்திய இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய தம்பதி, தங்கள் 6 வயது மகனுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டன.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர்கள் யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல் (6) என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமொக்காவில் பால்டிமோர் கவுன்டி பகுதியில் வசித்த அவர்கள் கடந்த 18-ம் திகதி துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை பொலிஸார் கண்டு பிடித்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் நாகராஜப்பா, தனது மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களது உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும். அவர்கள் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *