அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இடம்பெற்றது.

சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்த நிலையில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போயிங் தீயணைப்புத் துறை மற்றும் கிங் கவுண்டி தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்களும் பதிலளித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *