(இப்னு ஷெரீப்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆறாவது மாநாடும்
ஊடகவியலாளர் கௌரவிப்பைம் போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில்இன்று (20) அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்ரசிறி பிரதம அதிதியாகவும், தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கே.குணராசா சிறப்பு அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறைத
பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் கௌரவ அதிதியாகவும் கலநது சிறப்பித்தனர்.
இதன்போது ஊடகத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்கள் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து நடப்பாண்டுக்கான புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. இதன் தலைவராக எம்.எஸ்.எம்.ஹனீபாவும், செயலாளராக ஏ.எல்.எம்.சினாஸும், பொருளாளராக எம்.எப்.எம்.நவாஸும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.