அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை குழாத்தில் 15 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களுக்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிஷான் மதுஷ்க, துஷான் ஹேமந்த மற்றும் மிலான் ரத்நாயக்க உள்ளிட்ட இளம் வீரர்கள் சிலருக்கும் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஓசத பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, சாமிக்க கருணாரத்ன உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
அவர்களுக்கு பதிலாக சதீர சமரவிக்ரம, லசித் அம்புல்தெனிய , துஷான் ஹேமந்த ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
தொடரின் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன. தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.