இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் முழு அரசியல் தலைமைகளும் ஆழ்ந்த அவதானம் செலுத்துமாறு கோரி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி கடுமையாக சீர்குலைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு ஆபத்தான சூழ்நிலையில் அரசியல் நாடகங்களை புறக்கணித்து மக்களின் அவல நிலையை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு கத்தோலிக்க சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாணைக்கு கத்தோலிக்க திருச்சபைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த நிலையிலே இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கையை கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு கத்தோலிக்க திருச்சபையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.