அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற குறைந்த வருமானம் பெறும் 29 லட்சம் மக்களுக்கான அரிசி நிவாரணத்தில் கட்டாயமாக பெருந்தோட்ட மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இலங்கை நாட்டிலே உழைப்புக்கேற்ற ஊதியம் பெறப்படாமல் குறைந்த வருமானம் பெறுவது பெருந்தோட்ட மக்களே ஆகவே பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்களிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளேன் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.