அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அருகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு குறித்து சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் இன்று (25) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கான இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.

அதில் அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பிரதேசமாக ‘அருகம்பே’யை அபிவிருத்தி செய்யத் திட்டம்.

▪️ கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை இரண்டு கட்டங்களின் கீழ் 10 வருடங்களில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்.

▪️ அருகம்பே குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.

▪️ வர்த்தக சமூகம் எதிர்நோக்கும் காணி உறுதிப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. என பல விடயங்கள் ஆராய்யப்பட்டன

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *