உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) மற்றும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் திகதியும்இ இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் ஜூன் 16 ஆம் திகதியும் நடைபெற உள்ளது.
அதன்படி பேட் கம்மின்ஸ் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வோனர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதனிடையே இந்த இரண்டு தொடர்களுக்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி,
Pat Cummins (captain)
Scott Boland
Alex Carey
Cameron Green
Marcus Harris
Josh Hazlewood
Travis Head
Josh Inglis
Usman Khawaja
Marnus Labuschagne
Nathan Lyon
Mitchell Marsh
Todd Murphy
Matthew Renshaw
Steve Smith (vice-captain)
Mitchell Starc
David Warner
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் ஆஷஸ் தொடருக்கு பெயரிடப்படும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.