அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுதீயை எதிர்கொள்ளதயாராகவேண்டும் என எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 2019 – 20 கறுப்புகோடை கால காட்டுதீயின் பின்னர் மிகவும் ஆபத்தான காட்டுதீயை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமைக்கு மாறான வெப்பநிலைகாரணமாக அவுஸ்திரேலியாவின் பெருமளவு பகுதிகள் காட்டுதீயினால் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகின்றதாக அவுஸ்திரலேசிய தீ அதிகாரபேரவை தெரிவித்துள்ளது.

குறைவடைந்துள்ள மழைவீழ்ச்சி காலநிலை மாற்றங்கள் போன்றவையும் இவற்றுக்கு காரணம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குயின்ஸ்லாந்து நியுசவுத்வேல்ஸ் விக்டோரியா தென்அவுஸ்திரேலியா நோர்தேன் டெரிடட்டரி ஆகியன காட்டுத்தீயால் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசந்தகாலத்தில் காட்டுதீ என்பது வழமையான விடயம் எனினும் , காலநிலை தாக்கங்கள் இந்த பருவத்தில் காட்டுதீயின் அபாயத்தை அதிகப்படுத்தியுள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஏறக்குறைய நாடு முழுவதும் இந்த வசந்தகாலத்தில் வரண்ட மற்றும் வெப்பமான நிலைமையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ள ஏஎவ்ஏசி அமைப்பின் பிரதமநிறைவேற்று அதிகாரி ரொப்வெப் , எதிர்வரும் மாதங்களில் காட்டுத்தீ ஆபத்து குறித்து அவுஸ்திரேலிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *