ஆசியகிண்ணம் ஆண்களுக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதே ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடர் பாகிஸ்தானில் நேற்று ஆரம்பமானது.
தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் நோபாள அணிகள் முல்டானில் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தானிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப நான்கு விக்கெட்டுக்களையும் 124 ( 27. 5 ஓவர்களில்) ஓட்டங்களுக்கு இழந்த பாகிஸ்தான் அணி 200 ஐ தாண்டுமா என ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆயினும் அதிரடி ஆட்டக்காரரான பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் ரசிகர்களுக்கு இப்திகார் அகமட்டுடன் இணைந்து விருந்து படைத்தார்.
இருவரும் 5 ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 241 ஓட்டங்களை 131 பந்துகளில் எடுத்தனர்.
இதில் பாபர் அஸாம் 151 ஓட்டங்களை எடுத்தார். அத்துடன் ஆட்டநாயகனாக தெரிவானார்.
ஸ்கோர் விபரம்
பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 342 ஓட்டங்கள் ( பாபர் அஸாம் 151 ஓட்டங்கள் இப்திகார் அகமட் 109 ஓட்டங்கள்.
பந்து வீச்சில் நேபாள அணி சார்பாக சோம்பல் கமி 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள்
நேபாள அணி 23. 4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்கள். பந்துவீச்சில் ஷடா கான் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள்.
இன்று இலங்கை – பங்காளதேஸ் அணிகள் மோதுகின்றன.