ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பைசாபாத் பகுதியில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் இன்று (09) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் இதுவரை எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.