இசை நிகழ்ச்சிகளுக்கான இரவு 10 மணி வரையிலான காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத ஸ்தலங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து இசை நிகழ்ச்சிகளை நியாயமான தூரத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.