ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.

900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.

தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது வருகிறது.

விரைவில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

…………………….

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதியதில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது.

2004ம் ஆண்டு ஹிக்கடுவ பரேலியில் இடம்பெற்ற புகையிரத விபத்தின் பின்னர் இதுவே உலகின் மிக மோசமான ரயில் விபத்து என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை 7 மணியளவில் இந்த பயங்கர ரயில் விபத்து இடம்பெற்றது.

ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு ஓடும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பாலசோரில் தடம் புரண்டதில் முதல் விபத்து ஏற்பட்டது.

இதுவரை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளது.

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் பின்னர் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை மறைக்க துணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், பின்னர் காயமடைந்தவர்கள் தங்கியுள்ள மருத்துவமனைகளை பார்வையிட்டார்.

மேலும், இந்த பயங்கர ரயில் விபத்தால் அம்மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

21ம் நூற்றாண்டில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

மேலும், 2004ம் ஆண்டு பரேலியில் நடந்த ரயில் விபத்துக்குப் பிறகு உலகின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து 1981 இல் பதிவு செய்யப்பட்டது.

அங்கு சுமார் 800 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *