சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகம் நிதி உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், அந்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது, அந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.