கலைஞர் கருனாநிதியின் குடும்பத்தின் புதிய அரசியல் அறிமுகமாக இன்பநிதி வரப்போகிறார் என்பது ஒன்றும் பெரிய செய்தியல்ல.
ஆனாலும் இவ்வளவு வேகமாக வருகிறார் என்றதும் பலருக்கு அதிர்ச்சி . புதுகோட்டை தி.மு.க நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநிதி அவர்களின் பெயரில் பாசறை அமைதது எதிர்வரும் 24 ஆம் திகதி நலன்திட்டங்களை ஆரம்பிக்கிறார் என தெரிவித்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர்.
இதனை அடுத்து போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் நீக்கி இருக்கிறார்.