அஸ்ரப் அலீ
பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
அத்துடன் அவருக்கு பிணை வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அவருக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த வருட இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இம்ரான் கானுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
முன்னதாக அவருக்கு ஐந்து வருடங்கள் அரசியலில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவரது பிணை விடுதலை அறிவிப்பை அடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.