இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிடப்பட வேண்டும் என பாகிஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ராஜா ரியாஸ் அகமது கான் பேசும்போது, “நாடு முழுவதும் கலவர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்களின் செயலை கண்டு இந்த நாடு அவமானம் கொள்கிறது.
இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் அவரை மருமகனை போல் வரவேற்கிறது.
ஏழைகளுக்கு நீதி அளிக்கும் நீதிபதிகள் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.