இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS Vagir நீர்மூழ்கிக் கப்பல் இன்று(19) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய குறித்த கப்பலுக்கு வரவேற்பளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
67.5 மீட்டர் நீளமுடைய நீர்மூழ்கிக் கப்பலொன்றே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
60 ஊழியர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பலின் கட்டளைத் தளபதியாக கமாண்டர் S.திவாகர் செயற்படுகின்றார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள யோகா நிகழ்வொன்றில் இலங்கை மற்றும் இந்திய கடற்படை உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.