முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“இலங்கை பொருளாதாரத்தின் மீள் கட்டமைப்பு மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புக்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் டோக்கியோ நகரில் நேற்று இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.