உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில், இலங்கை அணிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் இடையில் இன்று (19) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
356 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில், இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.