இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ODI தொடரின் முதலாவது போட்டி ஜூன் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டி ஜூன் 4 ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

குறித்த 3 போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும்.

இந்நிலையில் இப்போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *